Home தென்னிலங்கைச் செய்திகள் ரணில் விவகாரம்; பிரித்தானியாவில் விசாரணை மேற்கொண்ட குழு நாடு திரும்புகிறது!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ரணில் விவகாரம்; பிரித்தானியாவில் விசாரணை மேற்கொண்ட குழு நாடு திரும்புகிறது!

Share
Share

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில்
கலந்துகொள்வதற்காக பிரித்தானிய பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது, 16.6 மில்லியன் ரூபா அரச நிதியை முறை கேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளைத்
தீவிரப்படுத்தியுள்ளது.

இதுவரை 50 பேரிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணையின் ஒரு பகுதியாக பிரித்தானியாவில் தற்போதுள்ள பொலிஸ் குழு, லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் நான்கு ஊழியர்களிடமும் இந்த வாரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.

இந்தக் குழு இன்று இலங்கைக்குத் திரும்பவுள்ளதுடன், நாடு திரும்பியவுடன் தமது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவை சந்தித்து, தமது சேவைப்பெறுநர் மீதான விசாரணையின் முன்னேற்றம் குறித்து விசாரித்தது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் குழு பிரித்தானியாவிலிருந்து திரும்பிய பின்னரே விசாரணையின் முன்னேற்றம் குறித்து மேலும் தெளிவுபடுத்த முடியும் என்று சட்டமா அதிபர் அவர்களிடம் தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...