Home தென்னிலங்கைச் செய்திகள் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

Share
Share

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, மூன்று பிரதான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதி மன்றில் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான 25 பக்கங்கள் கொண்ட விரிவான விசாரணை அறிக்கை நேற்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதி மன்றில் முன்வைத்துள்ள பிரதான குற்றச்சாட்டுகள் வருமாறு:-

விசாரணைகளை தவறாக வழிநடத்தியமை மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில்
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் சாய்ந்தமருது குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளைத் திட்டமிட்டுத் தவறாக வழிநடத்தியதாக சுரேஷ் சலே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

இதன் காரணமாகவே அவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபராகத்
தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தீவிரவாதிகளுக்கு தகவல் வழங்கியமை உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு முன்னர், கட்டுவாபிட்டிய தேவாலயத்தை இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு அடையாளம் காட்டிக் கொடுப்பதற்காகப் புலனாய்வுத் தகவல் வழங்குநர் ஒருவரை சுரேஷ் சலே பயன்படுத்தியதாக சி.ஐ.டி. தெரிவித்துள்ளது. மரபணுப் பரிசோதனையில்
அழுத்தம் கொடுத்தமை சாய்ந்தமருது குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, ‘சாரா ஜஸ்மின்’ மரணத்தை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இரண்டு மரபணுப் பரிசோதனைகள் தோல்வியடைந்தன.

இந்நிலையில்,
மூன்றாவது பரிசோதனையை முன்னெடுக்குமாறு புலனாய்வாளர்களுக்கு சுரேஷ் சலே தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகித்ததாகக் குற்றப் புலனாய்வுப்பிரிவு நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டத்தரணியின் வாதம் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முற்றாக நிராகரித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்கு தல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை என்றும், அவர் மலேசியாவில் இராஜதந்திரப் பணியில் ஈடுபட்டிருந்தார் என்றும் அவர் வாதிட்டார்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார, இது தொடர்பான மேலதிக அறிக்கைகளைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கை எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

    Share

    Leave a comment

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    மேலும் செய்திகள்

    Related Articles

    இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

    இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

    கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

    முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

    நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

    யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

    யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

    இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...