Home தாயகச் செய்திகள் வாழைச்சேனை தவிசாளர் உட்பட்ட ஐவருக்கும் பிணை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வாழைச்சேனை தவிசாளர் உட்பட்ட ஐவருக்கும் பிணை!

Share
Share

மட்டக்களப்பு மாவட்டம் – வாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிய மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் உட்பட ஐவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் உட்பட மூவர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பிலேயே மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (24) ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில்இ ஐவரையும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன் வாழைச்சேனை பிரதேச சபையின் ஒப்புதலுடன் அறிவிப்புப் பலகையை வைக்க சந்தேக நபர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...