Home தாயகச் செய்திகள் குச்சவெளியில் அடையாளம் தெரியாத நபரின் சடலம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

குச்சவெளியில் அடையாளம் தெரியாத நபரின் சடலம்!

Share
Share

திருகோணமலை, குச்சவெளி பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (23) குச்சவெளி பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக சில காயங்களுடன் ஒருவர் விழுந்து கிடப்பதாக பொலிஸாருக்கு தகவலொன்று கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த நபரை நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதித்திபோது, அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

47 முதல் 50 வயதிற்கு இடைப்பட்டவர் எனவும், 5 அடி, 4 அங்குலம் உயரமுடையவர் எனவும், மெலிந்த உடல் அமைப்பு கொண்டவர். அவரது தலைமுடி பக்கவாட்டில் சீவப்பட்டுள்ளது எனவும், நீல நில சாரம் அணிந்துள்ளதாகவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.

வலது காலில் காயம் ஏற்பட்ட அடையாளம், காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...