Home தாயகச் செய்திகள் தையிட்டியில் நீதி கோரிய ஐவரை பிடித்துச் சென்றது பொலிஸ்! விடுவித்தது நீதிமன்று!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தையிட்டியில் நீதி கோரிய ஐவரை பிடித்துச் சென்றது பொலிஸ்! விடுவித்தது நீதிமன்று!

Share
Share

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டபோது அடாவடியில் ஈடுபட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களையும் பிணையவில் விடுவிப்பதற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , இன்றைய தினம் விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கபட்டது.

குறித்த போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவை பெற்றுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேருக்கு எதிராக பெயர் குறிப்பிட்டும் போராட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ள தடையுத்தரவை பெற்றிருந்தனர்.

இந்நிலையில் , போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட பொலிஸார் , வேலன் சுவாமிகள் , வலிக்காமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபை தவிசாளர், மற்றும் வலி வடக்கு பிரதேச சபையின் மூன்று உறுப்பினர்களுமாக ஐந்து பேரை கைது செய்திருந்தனர்

கைது செய்யப்பட்ட ஐவரையும் விசாரணைகளின் பின் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, ஐவரையும் பிணையில் செல்ல நீதமன்றம் அனுமதித்தது.

அத்துடன், எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...