Home தாயகச் செய்திகள் தெற்கில் போதைப்பொருள் அச்சுறுத்தல்; பின்னணியில் ஓய்வுபெற்ற படையினரே – சபையில் கஜேந்திரகுமார்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தெற்கில் போதைப்பொருள் அச்சுறுத்தல்; பின்னணியில் ஓய்வுபெற்ற படையினரே – சபையில் கஜேந்திரகுமார்!

Share
Share

வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் ஈடுபாட்டை கையாளாமல் போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து விடுபட முடியாது. இதேபோன்று தெற்கில் போதைப் பொருள் அச்சுறுத்தலில் ஈடுபட் டவர்கள் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் தான் – இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பாராளுமன்றில் ஆற்றிய உரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன், நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) வடக்கு, கிழக்கில் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில்
அமைச்சர் இ.சந்திரசேகர் உரையாற்றினார்.

அவரின், அனுமதியுடன் உரையில் குறுக்கிட்டு, இராணுவத்தினரின் செயல்பாட்டை கையாளாவிட்டால் போதைப் பொருள் பரவலை வடக்கு, கிழக்கில் ஒழிக்க முடியாது என்று
கூறினேன்.

கிளர்ச்சிக்கு எதிரான ஓர் உத்தியாக இராணுவ கட்டமைப்பு போதைப்பொருளை கையாண்டது. அந்த உத்தி வடக்கு, கிழக்கில் பரவலாக மேற்கொள்ளப்பட்டது. இளைஞர்களின் விடுதலை போராட்ட உணர்வை சிதைக்கவே போதைப்பொருளும் பிறதீமைகளும் பரப்பப்பட்டன. இராணுவம் வடக்கு, கிழக்கில் இருக்கும் வரை – அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான மனநிலையை இன்னும் கொண்டிருக்கும் வரை போதைப்பொருட்களுக்கு எதிரான போர் முற்றிலும் தோல்வியடையும் என்ற கருத்துகளை கூறினேன்.

இந்தக் கருத்துகளுடன் அமைச்சர் சந்திரசேகர் உடன்பட்டார் – ஒப்புக்கொண்டார். ஏனெனில், ஜே.வி. பியை பிரதிநிதித்துவப்படுத்தி 15, 16 வருடங்களாக அவர் யாழ்ப்பாணத்தில் வசித்து வருகிறார்.

எனது கருத்து பொய் என்று கூற அவரால் முடியாது. நான் சொன்னது பொய் என்று அமைச்சர் கூறியிருந்தால் அவர் யாழ்ப்பாணத்துக்கு செல்ல முடியாது என்பது அவருக்கு தெரியும். எனவே, இயல்பாகவே அமைச்சர் பொறுப்பான முறையில் ஒப்புக்கொண்டார்.

ஆனால், பதில் பாதுகாப்பு அமைச்சரின் கருத்து எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இராணுவம் மிகவும் தூய்மையானது என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இராணுவத்தினர் பற்றிக்கூறிய கருத்துக்கு ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். நான் சில விடயங்களை பொறுப்புடன் தெரிவிக்கிறேன்.

பாதிக்கப்பட்ட மக்கள் இராணுவத்துக்கு எதிராக புகார் அளிக்க பொலிஸ் நிலையத்துக்குச் செல்லும் போது- பொலிஸார் அந்த முறைப்பாடுகளை ஏற்க மறுக்கிறார்கள். இந்த விடயங்கள் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் தெரிவிக்கப்படுபவை. இந்த அரசாங்கத்தின் காலத்தில் மட்டுமல்ல- முந்தைய அரசாங்கங்களான மகிந்த ராஜபக்ச, கோட்டாய, ரணில் விக்கிரமசிங்கவின் காலத்திலும் கூட தெரிவிக்கப்பட்டுள்ளன.

வன்னி மாவட்டத்தில் இரண்டு குடிமக்களுக்கு ஒரு இராணுவம் என்ற நிலை உள்ளது. இப்படியான நிலையில் இராணுவத்துக்கு தெரியாமல் போதைப் பொருள் பரவல் அதிகரித்துள்ளது என்று நீங்கள் சொல்ல வருகிறீர்களா? யாரை முட்டாளாக்க முயற்சிக்கிறீர்கள்?

இப்போதைய தரவின்படி யாழ்ப்பாணத்தில் 14 பொதுமக்களுக்கு ஒரு இராணுவம் என்ற நிலை காணப்படுகிறது. என்ற அதிகாரபூர்வ எண்ணிக்கையை அறியாமல் கருத்து சொல்ல வருகிறீர்களா? இராணுவ புலனாய்வுத்துறை மிக அதிகமாக இருக்கின்ற நிலையில்- உங்களுக்குத் தெரியாமல் இது நடக்கக்கூடும் என்று நீங்கள் சொல்லி தயவுசெய்து எங்களை முட்டாளாக்காதீர்கள போதைப்பொருள் மற்றும் பிற தீமைகளுக்கு எதிராக இந்த அரசாங்கம் செயல்படுவதற்கு எங்கள் முழு ஆதரவும் இருக்கும். வடக்கு, கிழக்கில் நீங்கள் இராணுவத்தின் ஈடுபாட்டைக் கையாளாமல் ஒருபோதும் அந்த அச்சுறுத்தலிலிருந்து விடுபட மாட்டீர்கள்.

தெற்கில் இதேவிதமான போதைப்பொருள் அச்சுறுத்தலில் ஈடுபட்டவர்கள் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள்தான். ஏனென்றால் கடந்த 17 ஆண்டுகளில் நீங்கள் அதை கட்டுப்படுத்தவில்லை. இப்போது தெற்கிலும் இது ஓர் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே,
தயவுசெய்து வடக்கு கிழக்கில் ஆரம்பித்த போதை பரவல் இப்போது நாடு முழுவதும் புற்றுநோயைப் போன்று பரவாமல் பார்த்துக் கொள்ளுங்கள் – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...

பேரிடர்; இலங்கையில் பேரழிவு!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் முல்லைத்தீவு, மன்னார் நகர...