Home தாயகச் செய்திகள் வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

Share
Share

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதன்போது திடீரென அதிகரித்த நீர்மட்டம் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் மூதூரில் பெரும்பாலான பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவருகிறது.

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதி, ஜாயா வீதி, அரபிக் கல்லூரி வீதி, சாபிநகர், கைதரியா நகர், இறால் குழி, தோப்பூர், கங்குவேலி, கட்டை பரிச்சான், ஆனைச்சேனை, பாலர் நகர், ஆலிம் நகர், ஜின்னா நகர் அறபா நகர், அரபுக் கல்லூரி வீதி, ரைஸ் மில் மணிக்கூட்டு கோபுர சந்தி உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் வீடுகள், சாலைகள் மற்றும் பொதுக் கட்டடங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் பல்வேறு அத்தியாவசிய சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெரும் பரப்பளவில் பரவியுள்ள விவசாய நிலங்களும் நீரில் மூழ்கியதால் பயிர் சேதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளம் அதிகரித்ததையடுத்து, தங்கள் வீடுகளில் தங்க முடியாத நிலையில் பல குடும்பங்கள் தற்போது தங்கள் உறவினரின் வீடுகளிலும் பாதுகாப்பான இடங்களிலும் தஞ்சமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...