Home தாயகச் செய்திகள் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

Share
Share

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள அதேவேளை ஆயிரம் குடும்பங்கள் உறவுகள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இது குறித்து முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இடைத்தகங்கல் முகாம்களில் 351 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 79 பேரும், கரைதுறைபற்று பிரதேசத்தில் 07 இடைத்தங்கல் முகாம்களில் 118 குடும்பங்களைச் சேர்ந்த முந்நூற்று அறுபது பேரும், மாந்தை கிழக்கு பிரதேசத்தில் ஐந்து இடைத்தங்கல் முகாம்களில் 153 குடும்பங்களைச் சேர்ந்த 516 பேரும், துணுக்காய் பிரதேசத்தில் ஒரு இடைத்தங்கல் முகாமில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேரும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 242 குடும்பங்களைச் சேர்ந்த 788 பேரும் என 24 இடைத்தங்கல் முகாம்களில் 891 குடும்பங்களைச் சேர்ந்த 02 ஆயிரத்து 808 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாயாறு பாலம் உடைந்தமையால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. வட்டுவாகல் பாலம் சேதமடைந்துள்ளமையால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

விவசாயிகள் இருவர் காணாமல் போயுள்ளனர். மின் சாரம் இல்லை, தொலைபேசி இணைப்புக்கள் செயற்படவில்லை. அனைத்து வீதிகளும் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தகவல்,
அனர்த்த முகாமைத்துவப் பிரிவு,
முல்லைத்தீவு.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...