Home தென்னிலங்கைச் செய்திகள் கப்பலில் போதைப்பொருள்; ஏழு பேர் கைது! 06 வாகனங்கள் பறிமுதல்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

கப்பலில் போதைப்பொருள்; ஏழு பேர் கைது! 06 வாகனங்கள் பறிமுதல்!

Share
Share

கிரிந்த கடற்கரையில் கப்பலொன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் 07 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலுக்கமைய, மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினரால், முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய நேற்று புதன்கிழமை (12) இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அவர்களிடமிருந்து, 329 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய, 06 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைக்காக, சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப்பொருள்தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த போதைப்பொருள் கையிருப்பின் மதிப்பு சுமார் 394 மில்லியன் ரூபாய் என, இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின்படி மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கொழும்பு மற்றும் தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பெறுவதற்காக திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

அதேநேரம், பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...