Home தென்னிலங்கைச் செய்திகள் போதைப்பொருள் விவகாரம்; எட்டு மாதங்களில் பெண்கள் 524 பேர் கைது!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

போதைப்பொருள் விவகாரம்; எட்டு மாதங்களில் பெண்கள் 524 பேர் கைது!

Share
Share

இலங்கையில் கடந்த 8 மாதங்களில் போதைப்பொருள் சார் குற்றங்கள் தொடர்பில் பெண்கள் 524 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

22 முதல் 60 வயதுக்கு உட்பட்ட பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2024 ஆம் ஆண்டு போதைப்பொருள்கள் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் 2 இலட்சத்து 28 ஆயிரம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸாரின் தரவுகள் குறிப்பிட்டுள்ளன.

இது, 2023 ஆண்டு காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 41 சதவீத அதிகரிப்பாகும்.

2024இல் 832.3 கிலோ ஹெரோயின், 8 ஆயிரத்து 359 கிலோ கஞ்சா மற்றும் 1,364 கிலோ ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...