Home தென்னிலங்கைச் செய்திகள் சஜித் கட்சியில் சங்கமித்த உறுப்பினர்களுக்கு எதிரான அனைத்து தடை உத்தரவுகளும் நீக்கம் – ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு முடிவு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

சஜித் கட்சியில் சங்கமித்த உறுப்பினர்களுக்கு எதிரான அனைத்து தடை உத்தரவுகளும் நீக்கம் – ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு முடிவு!

Share
Share

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த உறுப்பினர்கள் மீது முன்னர் விதிக்கப்பட்ட அனைத்து தடைகள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் நீக்க முடிவு செய்துள்ளது.

கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நேற்று மாலை நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தின் போது, இந்த நடவடிக்கையால் ஏற்படக் கூடிய சாத்தியமான சட்ட ரீதியான தாக்கங்களை ஆய்வு செய்வதற்காக முன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலக் மாரப்பன தலைமையிலான ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதைத் தடுத்திருந்த தடைகளை இந்த நடவடிக்கை நீக்கியுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதிலிருந்து கூட்டு அரசியல் முயற்சிகளை ஆதரித்த அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...