Home தாயகச் செய்திகள் புத்தளத்தில் அதிநவீன டொப்ளர் ராடர்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

புத்தளத்தில் அதிநவீன டொப்ளர் ராடர்!

Share
Share

இலங்கையின் கடும் வானிலை முன்னறிவிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக, புத்தளத்தில் அதிநவீன டொப்ளர் ராடர் கட்டமைப்பை நிறுவும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் இந்த டொப்ளர் ராடரை ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவுடன் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

இந்த ராடர் கட்டமைப்பு 2027 ஆம் ஆண்டளவில் முழுமையாகச் செயற்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் ஒரு முக்கிய மேம்படுத்தலாகக் கருதப்படுவதுடன், இதனுடன் மேலதிக அத்தியாவசிய உபகரணங்களும் வழங்கப்படும்.

இது 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட டொப்ளர் ராடர் அல்ல. முற்றிலும் புதியதொரு கட்டமைப்பாகும்.

நாட்டில் இரண்டு ராடர் கட்டமைப்புகள் இருப்பது, வானிலை தகவல்களை அதிக துல்லியத்துடன் வழங்க உதவும் என அமைச்சர் குறிப்பிட்டார். இந்தத் திட்டம் வெறும் வானிலை முன்னறிவிப்புடன் மாத்திரம் நின்றுவிடாமல், மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...