Home தாயகச் செய்திகள் பிள்ளையானின் சகா கைது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பிள்ளையானின் சகா கைது!

Share
Share

பிள்ளையானின் நண்பரான அஜித் என்பவர் மட்டக்களப்பு கொண்டையங்கேணியில் உள்ள அவரது வீட்டில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவினரால் அவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவங்கள் தொடர்பிலேயே அஜித் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, பிள்ளையான் என்ற சந்திரகாந்தனை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்துக் கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

இதனையடுத்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தேடப்பட்டு வந்த பிள்ளையானின் நண்பரான அஜித் என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை சுமன் குவைத் நாட்டுக்குத் தப்பி ஓடித் தலைமறைவாகி இருந்தார்.

இந்தநிலையில், அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மீண்டும் நாடு திரும்பியுள்ள நிலையிலேயே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...