Home தென்னிலங்கைச் செய்திகள் ஊழல் எதிர்ப்புக் காரணமாக எதிர்க்கட்சிகளுக்கு உதறல் – அமைச்சர் நளிந்த!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ஊழல் எதிர்ப்புக் காரணமாக எதிர்க்கட்சிகளுக்கு உதறல் – அமைச்சர் நளிந்த!

Share
Share

தேசிய மக்கள் சக்தி அரசின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையால் எதிர்க்கட்சிகளுக்கு உதறல் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“சில ஒன்றிணைவுகள் அச்சம் காரணமாகவே ஏற்படுகின்றன. பாதாளக் குழு உறுப்பினர் கெஹேல்பத்தர பத்மே உள்ளிட்ட மூவரை இந்தோனேசியாவில் வைத்து நாங்கள் கைது செய்தபோது, அவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கவில்லை. மாறாக, கைது பயத்தில் ‘பெக்கோ சமன்’ என்பவரின் வீட்டுக்குச் சென்று ஒளிந்திருந்தனர்.

இதனால் அனைவரையும் கூண்டோடு கைது செய்வதற்கு பொலிஸாரால் முடிந்தது. அவர்களுக்கு ஏற்பட்ட அச்சம்தான் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்றுகூட வைத்தது.
அவ்வாறுதான் எதிர்க்கட்சிகளுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அந்த அச்சத்தால்தான் எதிர்க்கட்சியினர் ஓரணியில் இணைந்து வருகின்றனர்.

எதிர்க்கட்சிகளை திட்டமிட்டு ஒடுக்க வேண்டிய நோக்கமும் – தேவையும் எமக்கில்லை. ஆனால், எத்தனை தரப்புகள் ஒன்றாக இணைந்தாலும், சட்டம் நடைமுறையாகியே தீரும் – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...