அதிக மழைவீழ்ச்சி காரணமாக, 45 பாகைக்கும் குறைவான சரிவு பகுதிகளிலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது என்று பேராதனை பல்கலைக்கழகத்தின்
புவியியல் ஆய்வு துறையின் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட பேராசிரியருமான அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதனால், மண்சரிவு அபாய வலயங்களை மீண்டும் புதியமுறையில் வரைபடமாக்குவது அவசியமானது. பொதுவாக 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் போது 45 பாகை சரிவு கொண்ட பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்படுகின்றன.
இருப்பினும், தற்போதைய சூழலில் 500 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி கிடைக்கும் இடங்களில், சரிவு குறைவாக இருந்தாலும் மண் தட்டுகள் கனமாக இருந்தாலும் பெரும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
குறைந்த சாய்வு கொண்ட பகுதிகளில் மண்சரிவு அபாயத்தைக்
கண்டறியும் நோக்கில், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் 12 மாவட்டங்களை மையப்படுத்தி புதிய வரைபடமாக்கல் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் புவியியலாளர்கள், பேராதனை பல்கலைக்கழக புவியியல் ஆய்வுத் துறையின் மாணவர்கள், இதர விசேட ஆய்வுப் பிரிவினர் கலந்துகொள்ளவுள்ளனர் – என்றும் தெரிவிக்கப்பட்டது.
Leave a comment