Home தாயகச் செய்திகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

Share
Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது இடையூறு விளைவிக்கவோ வேண்டாம் என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை நடை பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்
இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

இந்த பயங்கரவாத தாக்குதலில் 300 இற்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகின. உயிரிழந்தவர்களில் அனைத்து மதத்தவர்களும், அனைத்து இனத்தவர்களும் அடங்குவர்.
இது ஒரு திட்டமிட்ட மனிதப்படுகொலை. இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை கண்டறிவது என்பது, இந்த நாட்டில் சட்டம் சரியாகச் செயற்படு
கின்றது என்பதை உறுதிப்படுத்தும் ஒரு விடயமாகும். அவ்வாறு உண்மை கண்டறியப்படாவிட்டால், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும் என்ற
அச்சமற்ற நிலை உருவாகும்.

புலனாய்வுப் பிரிவு முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேயின் கைது மற்றும் தற்போதைய விசாரணைகளுக்கு பல்வேறு தரப்பினர் தமக்குச் சாதகமான வியாக்கியானங்களை அளித்து வருகின்றனர்.

இவர்களின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரிகிறது. இது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுக்கும் சுதந்திரமான விசாரணை. எனவே, இதனை அரசியல் மயமாக்காமல் விசாரணைகளை அதன் போக்கில் முன்னெடுக்க இடமளிக்கவேண்டும்.

விசாரணைகளைக் குழப்ப முயற்சிப்பதானது, இத்தாக்குதலில் உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும் மக்கள் அனைவரும் பொறுமையுடன் காத்திருந்து உண்மைகள் வெளிவர ஒத்துழைக்கவேண்டும்.

புலனாய்வுப் பிரிவினர் தமது பணிகளைச் சுதந்திரமாக முன்னெடுக்க அனைவரும் இடமளிக்க வேண்டும் – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...