டித்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட நாட்டை முழுமையாக மீளமைப்பதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக நிலவும் மண் சரிவு அபாயங்கள், மேலும் பல பகுதிகளில் மக்களையும் பாடசாலைகளையும் இடமாற்றம் செய்யவேண்டிய அவசியம் ஆகியவை இதற்குக் காரணமாக உள்ளன என்றும் அவர்கூறினார்.
சாதாரண மழையினாலும் கூட மண் சரிவு அபாயங்கள் தூண்டப்படுவதாகக் குறிப்பிட்ட
பிரதமர், இது மீட்பு நடவடிக்கைகளை பெரிதும் சிக்கலாக்குவதாக தெரிவித்தார்.
இந்த காரணிகள் மீளமைப்பு செயல்முறையை தவிர்க்க முடியாத வகையில் நீடிக்கும். குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என அவர் கூறினார்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், சில பாடசாலைகள் இடமாற்றம் செய்யப்படவேண்டிய நிலை ஏற்படலாம் என்பதை உறுதிப்படுத்தினார்.
டித்வாவிற்குப் பின்னர் மூடப்பட்ட 1,362 பாடசாலைகளில் 666 பாடசாலைகள் இன்னும் திறக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகா ணங்களில் உள்ள பல உயர் கல்வி நிறுவனங்கள் கடுமை யாக சேதமடைந்துள்ளன என்றும் அவர் கூறினார்.
Leave a comment