Home தாயகச் செய்திகள் பிக்குகளிடம் மன்னிப்புக் கோரினால் சஜித்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பிக்குகளிடம் மன்னிப்புக் கோரினால் சஜித்!

Share
Share

திருகோணமலையில் பௌத்த பிக்குகளுக்கு நடந்த வேண்டத்தகாத செயல்பாடுகளுக்காக மன்னிப்பு கோருகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாம் தேர்தல் அரசியலுக்கு மதத்தைப் பயன்படுத்தாத உண்மையான பௌத்தர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

‘திருகோணமலையில் பௌத்த பிக்குகளுக்கு நடந்த வேண்டத்தகாத செயல்பாடுகளுக்காக மன்னிப்பு கோருகிறேன். மன்னிப்பு கோர வேண்டியபொறுப்பானவர்களுக்கு அதை நிறைவேற்றத் தேவையில்லாத போதிலும்
பொறுப்பு வாய்ந்த மக்கள் பிரதிநிதி மற்றும் எதிர்க்கட்சி என்ற அடிப்படையிலும் அதனை நிறைவேற்றுகிறோம்.

‘பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிப்பதோடு ஏனைய சமயத்தவர்களுக்
கும் சமமான உரிமை அளிக்கப்பட வேண்டும். இவற்றில் பிரச்னை ஏற்படுமானால் தேசிய பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படலாம். அதனால் நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். ஒருமைப்பாடே தேசிய பாதுகாப்பு ஆகும். அப்படி பார்த்தால் இன்று நடப்பது பேரழிவாகும். பொலிஸார் மேலிடத்தில் இருந்து கிடைத்த பணிப்புரைக்கமைய புத்த சிலையை அகற்றி, பின்னர் வைக்கின்றனர்.

‘வேலை செய்ய தெரியாது. அத்தோடு வேலைசெய்து பழக்கமில்லை. இவ்வாறான பிரச்னைகள் மென்மையாக தீர்த்திருக்க வேண்டியவை. வார்த்தைகளில் பெரும் செயல்பாடுகள் தொடர்பில் பேசுவோரிடம் செயல்பாடுகள் இல்லை. நாம் தேர்தல் அரசியலுக்காக மதத்தை பயன்படுத்தாத உண்மையான பௌத்தர்கள்’என்றும் கூறியுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...