Home தென்னிலங்கைச் செய்திகள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு; வாக்குறுதி கட்டாயம் நிறைவேறும் என்கிறார் ரில்வின் சில்வா!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு; வாக்குறுதி கட்டாயம் நிறைவேறும் என்கிறார் ரில்வின் சில்வா!

Share
Share

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் என்பன உட்பட தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் எனத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் உறுதியளித்தோம். அந்த உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும்.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எல்லை நிர்ணயம் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பிரச்சினையைத் தீர்த்துத் தேர்தலை நடத்த வேண்டும்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு மாகாண சபை முறைமை தீர்வு அல்ல என்ற போதிலும் தற்போது அந்த முறைமை இருப்பதால் அதில் கைவைக்கப்படாது எனவும், புதிய அரசமைப்பு ஊடாக தற்போது இருப்பதைவிட சிறப்பான தீர்வு வழங்கப்படும் எனவும் நாம் உறுதியளித்துள்ளோம். இந்த உறுதிமொழியும் நிறைவேற்றப்படும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...