Home தென்னிலங்கைச் செய்திகள் சட்டத்தின் பிடியில் இருந்து ராஜபக்ஷக்கள் தப்ப முடியாது! – தண்டனை கிடைத்தே தீரும் என்கின்றது அரசாங்கம்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சட்டத்தின் பிடியில் இருந்து ராஜபக்ஷக்கள் தப்ப முடியாது! – தண்டனை கிடைத்தே தீரும் என்கின்றது அரசாங்கம்!

Share
Share

“ராஜபக்ஷக்கள் பாரிய குற்றங்களை இழைத்தவர்கள். அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். சட்டத்தின் பிடியில் இருந்து அவர்கள் தப்ப முடியாது.” – இவ்வாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.  

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“கொழும்பில் இருந்து தங்காலைக்குக் குடியமரச் சென்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவும், அவரின் குடும்பத்தினரும் அங்கிருந்து கொண்டு அரசியல் இலாபம் தேடும் வகையில் ஒப்பாரி வைக்கின்றனர். அவர்களின் ஒப்பாரியால் நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்த முடியாது.

ஒப்பாரி வைத்து தப்பிப்பிழைக்கலாம் என்று அவர்கள் எண்ணுகின்றனர்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல், மோசடிகள் என ராஜபக்ஷக்கள் இழைத்த குற்றங்களுக்குத் தண்டனை கிடைத்தே தீரும்.

மீண்டும் மொட்டுக் கட்சியின் ஆட்சி மலரும் என்று ‘குட்டி ராஜபக்ஷ’ நாமல் கனவு காண்கின்றார். அவர் இழைத்த குற்றங்களை அவர் மறந்தாலும் மக்கள் மறக்கவில்லை.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...