Home தென்னிலங்கைச் செய்திகள் கொழும்பில் மர்மமாக உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

கொழும்பில் மர்மமாக உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு!

Share
Share

கொழும்பின் இரு வேறு பகுதிகளில் மர்மமான முறையில் உயிரிழந்த இருவரது சடலம் திங்கட்கிழமை (29) பொலிஸாரால் மீட்கப்பட்டன. கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இங்குருகடே சந்திக்கருகில் உள்ள ஜாடி வாவியிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

பிற்பகல் 5.20 மணியளவில் பொலிஸாருக்கு பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

சுமார் 35 தொடக்கம் 40 வயது மதிக்கத்தக்க 5 அடி 4 அங்குலம் உயரமான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் இறுதியாக கறுப்பு நிற அறை காட் சட்டையும், கறுப்பு நிற மேற்சட்டையும் அணிந்திருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிவர்தன வீதியில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

23 வயதுடைய தெஹிவளை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பொலிஸார் மேற்படி சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...