Home தென்னிலங்கைச் செய்திகள் ஒரே வருடத்தில் சிறையில் அடைக்கப்பட்ட குழந்தைகள் 47 பேர்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ஒரே வருடத்தில் சிறையில் அடைக்கப்பட்ட குழந்தைகள் 47 பேர்!

Share
WIDE SHOT two pairs of Black and Caucasian male hands resting on prison cell bars
Share

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளுடன் குழந்தைகள் 47 பேர் சிறைச்சாலையில் உள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஆண் குழந்தைகள் 20 பேரும் பெண் குழந்தைகள் 27 பேருமே இவ்வாறு பெண் கைதிகளுடன் சிறைச்சாலையில் உள்ளனர்.

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பெண்கள் 1483 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெண்கள் 229 பேர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்றவர்கள் ஆவர்.

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பெண்கள் 184 பேர் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதி மன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...