Home தென்னிலங்கைச் செய்திகள் அநுர அணியை விரைவில் வீட்டுக்கு விரட்டியடிப்போம்   – மொட்டுவின் ஆட்சி மீண்டும் மலரும் என்கின்றார் நாமல்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

அநுர அணியை விரைவில் வீட்டுக்கு விரட்டியடிப்போம்   – மொட்டுவின் ஆட்சி மீண்டும் மலரும் என்கின்றார் நாமல்!

Share
Share

“மக்களின் ஆணையை மீறிச் செயற்படும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவையும் அவர் தலைமையிலான அரசையும் மக்களின் ஆதரவுடன் மிக விரைவில் வீட்டுக்கு விரட்டியடிப்போம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சி மீண்டும் மலரும் என்பது உறுதி.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“ஜனாதிபதி அநுர மீதும் அவர் தலைமையிலான அரசு மீதும் நாட்டு மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். மக்களின் ஆணையை மீறி அவர்கள்  செயற்பட்டு வருகின்றார்கள்.

அரசின் முறையற்ற தீர்மானங்களுக்கு எதிராகப் போராடும் மக்களை பொலிஸார் மூலம் துன்புறுத்தி அடக்க ஜனாதிபதி முயல்கின்றார்.

கடந்த ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களை ஜனாதிபதி அநுரவும் அவர் தலைமையிலான அரசும் திட்டமிட்டுப் பழிவாங்கி வருகின்றனர்.

இந்த அநுர அணியை மக்களின் ஆதரவுடன் மிக விரைவில் வீட்டுக்கு விரட்டியடிப்போம். மொட்டுக் கட்சியின் ஆட்சி மீண்டும் மலரும் என்பது உறுதி.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...