Home தாயகச் செய்திகள் பருத்தித்துறை பிரதேச சபைக் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

பருத்தித்துறை பிரதேச சபைக் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு!

Share
Share

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்தக் கூட்ட அறிக்கையில் திருத்தம் செய்யப்படாமையைக் காரணம் காட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளனர்.

சபையின் கூட்டம் நேற்று திங்கட்கிழமை காலை 9.45 மணியளவில் தவிசாளர் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது கடந்த கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்ட நிலையில் அதனைத் திருத்தம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியில் ஒன்றான ஈ.பி.டி.பி. உறுப்பினர் தவிர்ந்த ஏனைய ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்கு), தேசிய மக்கள் சக்தி, சுயேச்சைக் குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள்  ஆட்சேபம் தெரிவித்து வெளிநடப்புச் செய்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்த போதிலும் ஆட்சியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் 9 பேரும் ஈ.பி.டி.பி. ஒருவருமாக பத்து உறுப்பினர்கள் சகிதம் மாதாந்தக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...