Home தென்னிலங்கைச் செய்திகள் இலங்கையில் இலத்திரனியல் அடையாள அட்டை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கையில் இலத்திரனியல் அடையாள அட்டை!

Share
Share

இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்துரைத்த அவர், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

இலத்திரனியல் அடையாள அட்டை, ஒரு நபரின் அடையாளத்தை சரிபார்ப்பதை எளிதாக்கும் என்றும் மரபணு தரவுகளைப் பாதுகாப்பாக சேமிக்கும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின் ஊடாக, அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆவணச் சான்றிதழின் தேவையும் குறைவடையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் அடையாள அட்டை அமுலுக்கு வந்ததன் பின்னர், நிகழ்நிலை மோசடிகள் கட்டுப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் – IMF பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் எனத் தெரிவித்துள்ள...