Home தென்னிலங்கைச் செய்திகள் மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில்விரைவில் நடத்தப் பரிசீலிக்கின்றது அநுர அரசு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில்விரைவில் நடத்தப் பரிசீலிக்கின்றது அநுர அரசு!

Share
Share

பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு பரிசீலித்து வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எல்லை நிர்ணய செயல்முறை முடிவடைந்த பின்னரே தேர்தல் நடத்தப்படும் என்று அரசு முன்னர் கூறியிருந்தது.

எனினும்,

புதிய எல்லை நிர்ணய செயல்முறை சிக்கலானது,  நீண்டது என்பதால், அடுத்த தேர்தலை, 1988ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின்கீ ழ் நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
 
தாமதமின்றி மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு மீது அழுத்தம் அதிகரித்து வரும் நிலையிலேயே இந்தத் திட்டத்தை அரசு பரிசீலிக்கின்றது என்றும் கூறப்படுகின்றது.
 
இந்தநிலையில் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இந்தியப் பிரதிநிதி மாகாண சபைகள் தேர்தலை நடத்துமாறு அரசை வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...