Home தாயகச் செய்திகள் நீதி அமைச்சர் தலைமையில் விசேட குழு ஜெனிவா விஜயம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

நீதி அமைச்சர் தலைமையில் விசேட குழு ஜெனிவா விஜயம்!

Share
Share

நீதி அமைச்சர் ஹர்சன ராஜகருணா, பிரதி அமைச்சர் முனீர் மௌலவி உட்பட அந்த அமைச்சின் அதிகாரிகள் கொண்ட விசேட குழு இந்த வாரம் ஜெனிவா செல்கின்றது.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெறுகின்றது. இதில், பங்கேற்கவே இந்தக் குழு அங்கு செல்கின்றது.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழு கடந்த திங்கட்கிழமை ஜெனிவா சென்று இலங்கையின் நிலைப்பாட்டை அறிவித்து, நாடு திரும்பியுள்ளது. இந்தநிலையிலேயே  நீதி அமைச்சர் தலைமையில் விசேட குழு  ஜெனிவா செல்லவுள்ளது.

இந்தக் குழு ஜெனிவாவில் உள்ளக நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைச்  சுட்டிக்காட்டவும் உள்ளகப் பொறிமுறை விசாரணைகளை வலுப்படுத்தும் செயல்முறைகளை வலுப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபடும் என்றும் கூறப்படுகின்றது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...