விபத்தில் சிக்கிய வயோதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ். திருநெல்வேலி – கலாசாலை வீதி பகுதியைச் சேர்ந்த வல்லிபுரம் மகாலிங்கம் (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருபவை வருமாறு,
மேற்படி வயோதிபர், கடந்த 5ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் கிளிநொச்சிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இதன்போது ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானார்.
இதில், படுகாயமடைந்த அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இந்த மரணம் தொடர்பான விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Leave a comment