Home தாயகச் செய்திகள் உள்ளக, கலப்பு பொறிமுறையை முற்றாக நிராகரிக்க வேண்டும்! ஐ.நா. மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளிடம் 69 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கூட்டாகக் கோரிக்கை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உள்ளக, கலப்பு பொறிமுறையை முற்றாக நிராகரிக்க வேண்டும்! ஐ.நா. மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளிடம் 69 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கூட்டாகக் கோரிக்கை!

Share
Share

இலங்கையில் நடந்த இனப்படுகொலை, மனித உரிமைகள் மீறல் என்பவற்றுக்கு நீதி – தீர்வு காண்பதற்கு உள்ளக மற்றும் கலப்புப்  பொறிமுறையை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று 69 புலம்பெயர் தமிழர் அமைப்புகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளைக் கோரியுள்ளன.

இது தொடர்பில் அந்த அமைப்புகள் எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:-

“பொறுப்புக்கூறலுக்கான ஆக்கபூர்வமான செயல்முறையை இலங்கை அரசாங்கத்திடம் வலியுத்துவதன் மூலம் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளக  பொறிமுறைக்கான இடைவெளியை வழங்குவதானது, அத்தகைய உள்ளகப் பொறிமுறைகளின் நீண்டகாலத் தோல்வியின் பின்னணியில் அச்சுறுத்தலானதொரு நிலையையே தோற்றுவிக்கும்.

சுயாதீன சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்றைத் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கும் சூழ்நிலையில் இவ்வாறான நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபைமீதான நம்பிக்கையில் சரிவு ஏற்படவும் –  தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்வதற்குமே வழிகோலும்.

மேலும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான உள்ளக மற்றும் கலப்பு பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்கிறோம். இனவழிப்புப் பிரகடனத்தின்கீழ் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.” – என்றும் அந்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...