Home தென்னிலங்கைச் செய்திகள் சூடுபிடிக்கும் அரசியல் களம் – ரணிலையும் சந்தித்துப் பேசிய சீனத் தூதுவர்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

சூடுபிடிக்கும் அரசியல் களம் – ரணிலையும் சந்தித்துப் பேசிய சீனத் தூதுவர்!

Share
Share

இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் இன்று இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சீனத் தூதுவரின் கோரிக்கைக்கு அமைய இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலுமான அரசியல் நிலைமைகள் குறித்து இந்தச் சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு – விஜேராம மாவத்தையில் உள்ள அரச  இல்லத்தில் இருந்து நேற்று வெளியேறுவதற்கு முன்னர், அவருடன் சீனத் தூதுவருடன் இது போன்ற ஒரு கலந்துரையாடலை நடத்தியிருந்தார்.

மேலும், மற்றொரு உயர்மட்ட முன்னாள் அரசியல்வாதியுடனும் சீனத் தூதுவர் எதிர்காலத்தில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...