Home தாயகச் செய்திகள் படம் இணைப்பு – செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு மீட்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

படம் இணைப்பு – செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு மீட்பு!

Share
Share

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் கால்கள் மடிக்கப்பட்டு இருத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் எலும்புக்கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகளின் போது நேற்று வியாழக்கிழமை குவியலாக எட்டு மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றைச் சுத்தம் செய்யும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, அவற்றுள் ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அது தொடர்பில் தெளிவான விளக்கத்தைப் பெற யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத் துறை மூத்த விரிவுரையாளர் புதைகுழிப் பகுதிக்கு அழைக்கப்பட்டு, அது தொடர்பான அவரது அவதானிப்புகள், விளக்கங்கள் கோரப்பட்டன.

அவர் தனது அவதானிப்பின்படி, மேற்படி மனித என்புத் தொகுதி இந்து முறைப்படி முறையாக அடக்கம் செய்யப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படவில்லை எனவும், எலும்புக்கூட்டின் கைகள் காணப்படும் நிலைமை உள்ளிட்ட காரணிகளால் அது முறையாக அடக்கம் செய்யப்பட்ட எலும்புக்கூடு இல்லை எனவும் தெரிவித்தார்.

அதையடுத்து அது தொடர்பிலான விவரமான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ். மேலதிக நீதிவான் செ.லெனின்குமார் உத்தரவிட்டார்.

அதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழிக்காக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதித்த 45 நாள்கள் நாளை சனிக்கிழமையுடன் நிறைவு பெறவுள்ள நிலையில், அடுத்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் நாளை நீதிவான் திகதியிடுவார் என்று சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சர்வதேசத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை – தமிழரசுக் கட்சி அறிக்கை!

“ஆயுதப் போராட்டம் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளான போதும், எந்த உள்ளகப் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் இன்னமும் உருவாக்கப்படவில்லை....

ஐ. நா. தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இருந்து விலகுகிறது இலங்கை?!

இலங்கையின் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் பிரச்னைகள் தொடர்பில் ஒரு பொறிமுறையை கோரி, பிரிட்டன் தலைமையிலான நாடுகளின்...

வெலிகந்தையில் கராஜில் இருந்துநாற்பது தோட்டாக்கள் கைப்பற்றல்!

பொலனறுவை, வெலிகந்தை, நாமல்கம பகுதியில் உள்ள வீடொன்றின் கராஜுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 மில்லிமீற்றர் ரக...

செம்மணி வழக்கில் பெரும் எதிர்பார்ப்பு!

செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில்...