Home தென்னிலங்கைச் செய்திகள் செம்மணியில் 240 ஐத்தொட்ட எலும்புக்கூடுகள்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

செம்மணியில் 240 ஐத்தொட்ட எலும்புக்கூடுகள்!

Share
Share

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று வெள்ளிக்கிழமை புதிதாக 5 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப்  பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாள்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்று வெள்ளிக்கிழமை 44 ஆவது நாளாக அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது புதிதாக 5 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

அதற்கமைய இதுவரையில் 240 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 11 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டன.

இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 235 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...