Home தாயகச் செய்திகள் விபத்தில் சிக்கிய சிறுவன் மரணம்! தாய், தந்தை, சகோதரி படுகாயம்! மன்னாரில் சம்பவம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

விபத்தில் சிக்கிய சிறுவன் மரணம்! தாய், தந்தை, சகோதரி படுகாயம்! மன்னாரில் சம்பவம்!

Share
Share

மன்னார் – நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிகுளம் பகுதியில் இன்று (10) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் 12 வயது சிறுமி படுகாயமடைந்த நிலையில், 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் இன்று (10) மாலை நானாட்டான் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, நானாட்டான் பிரதான வீதி வழியாக மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பிக்கப் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், பலத்த காயங்களுக்கு உள்ளான 4 வயது சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

மேலும், தந்தை, தாய் மற்றும் 12 வயது சிறுமி ஆகிய மூவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த வாகனத்தின் சாரதியை கைது செய்த முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பரீட்சை பெறுபேறுகளை மாத்திரம் வைத்து கல்வியை அளவிடும் முறைமை மிகவும் தவறானது – பிரதமர் ஹரிணி!

பரீட்சை பெறுபேறுகளை மாத்திரம் வைத்து கல்வியை அளவிடும் முறைமை மிகவும் தவறானது எனவும், அந்த முறைமை...

போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் இல்லை – சிறீதரன் எம்.பி. விசனம்!

“இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர்...

தேடப்பட்டுவரும் செவ்வந்தியின் தாய் சிறையில் மரணம்!

பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின்...

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறியதமிழக மீனவர்கள் எழுவர் கைது!

தமிழக மீனவர்கள் 7 பேர் யாழ். கடற்பரப்பில் ஒரு படகுடன் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது...