Home தாயகச் செய்திகள் மன்னாரில் தந்தை செல்வாவின் உடைக்கப்பட்ட சிலை புனர் நிர்மாணம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மன்னாரில் தந்தை செல்வாவின் உடைக்கப்பட்ட சிலை புனர் நிர்மாணம்!

Share
Share

மன்னார் நகரில் அமைந்திருந்த தந்தை செல்வாவின் உருவச்சிலை கடந்த வாரம் இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்ட நிலையில் அந்த உருவச்சிலை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை (01) காலை திறந்துவைக்கப்பட்டது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சிலை திறப்பு நிகழ்வில் மதத் தலைவர்கள், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளை தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சாள்ஸ் நிர்மலநாதன், கட்சியின் உறுப்பினர்கள், மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், நகர சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் மத தலைவர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மன்னார் நகர மத்தியில் மாவட்டச் செயலகத்துக்கு முன் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலை கடந்த புதன்கிழமை (25) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளை முக்கியஸ்தர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

தந்தை செல்வாவின் உருவச் சிலையில் காணப்பட்ட அவரது தலை முழுமையாக அகற்றப்பட்ட நிலையில் அவரது சிலைக்கு அருகில் இருந்து தலைப்பாகம் மீட்கப்பட்டுள்ளது.

சிலை உடைப்பு சம்பவத்தை தொடர்ந்து மன்னார் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைவாக இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...