Share

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில்
இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புன்னைநீராவி பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய மோகனபவன் வனிதா என்ற இரண்டு
பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 09 ஆம் திகதி உறவினருடன் மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்ற
பொழுது திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி
விழுந்துள்ளார்.

இந்நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...