Share

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் இம்மாதம் 4 ஆம் திகதி இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தங்காலை நகர சபையின் பெண் ஊழியர் இன்று வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தங்காலை நகர சபையில் கடமையாற்றிய 41 வயதுடைய பெண் ஊழியரே உயிரிழந்துள்ளார்.

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4 ஆம் திகதி இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேருக்கும் அதிகமானோர் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் தங்காலை நகர சபையில் கடமையாற்றிய 12 ஊழியர்களும் அடங்குகின்றனர்.

இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தங்காலை நகர சபையின் பெண் ஊழியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

அதன்படி, எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4 ஆம் திகதி இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...