Home தென்னிலங்கைச் செய்திகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காணாமல் போனோர் தொடர்பில் முறைப்பாடுகள்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காணாமல் போனோர் தொடர்பில் முறைப்பாடுகள்!

Share
Share

2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 

அதன்படி 10,000 க்கும் மேற்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். 

இதற்காகப் பாதிக்கப்பட்டவர்களின் அலுவலகம் மற்றும் காணாமல் போனவர்களின் அலுவலகம் ஆகியவற்றிற்கு ஒரு புதிய வழிமுறைகள் ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

சர்வதேச காணாமல் போனவர்களின் நினைவு தினம் நாளை நினைவுகொள்ளப்படுகிறது. 

இதனை முன்னிட்டு காணாமல் போனவர்களின் அலுவலகம் இன்று அலரி மாளிகையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். 

இந்தநிலையில் வலுக்கட்டாயமாகக் காணாமல் போதல்கள் தற்செயலான சம்பவங்கள் அல்ல. அவை குற்றங்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்தக் குற்றங்கள் வாழ்வதற்கான உரிமை குடும்ப ஒற்றுமைக்கான உரிமை மற்றும் கண்ணியத்திற்கான உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை வேண்டுமென்றே மீறும் செயலாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

எனவே இவற்றை மறுப்பதோ அல்லது அவர்கள் சார்பாக செய்ய வேண்டிய பணிகளைத் தாமதப்படுத்துவதோ அரசின் பங்கு அல்ல என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மாறாக நாட்டின் அரசு அதனை அங்கீகரித்து செயல்பட வேண்டும். 

இதன் காரணமாகவே தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் நீதியைக் கொள்கை அறிக்கையின் மையத்தில் வைத்துள்ளதாகவும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். 

அதற்கமைய 2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு மற்றும் தெற்கில் பதிவான 10000 க்கும் மேற்பட்ட காணாமல் போனோர் வழக்குகள் குறித்து விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

இந்த விசாரணைகளுக்காக 375 மில்லியன் ரூபாயை செலவிட எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...