Home தென்னிலங்கைச் செய்திகள் விசேட சுற்றிவளைப்பின்போது துப்பாக்கிதாரிகள் 38 பேர் சிக்கினர்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

விசேட சுற்றிவளைப்பின்போது துப்பாக்கிதாரிகள் 38 பேர் சிக்கினர்!

Share
Share

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பல்வேறு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 38 துப்பாக்கிதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் மேற்படி 38 துப்பாக்கிதாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய   27 மோட்டார் சைக்கிள் செலுத்துநர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்க உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 263 பேரும், சந்தேகத்தின் பேரில் 328 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விசேட நடவடிக்கையின்போது ரி – 56 ரக துப்பாக்கிகள் 61 , பிஸ்டல் ரக துப்பாக்கிகள் 62, ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் 40 மற்றும்  ஏனைய ரக துப்பாக்கிகள்  1,721 கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...