Home தாயகச் செய்திகள் வன்னியின் மூத்த செய்தியாளர் ந.கிருஷ்ணகுமார் காலமானார்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வன்னியின் மூத்த செய்தியாளர் ந.கிருஷ்ணகுமார் காலமானார்!

Share
Share

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் செய்தியாளராக பணியாற்றிய ந.கிருஷ்ணகுமார் இன்று உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

90களின் இறுதிக் காலம் தொடக்கம் புலிகளின்குரல் வானொலியின் செய்தியாளராக இணைந்த கிருஷ்ணகுமார் போர் நிறைவடைந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் வானொலியின் அலுவலக செய்தியாளராகப் பணியாற்றியிருந்தார்.

போர் மிகத் தீவிரம் பெற்றிருந்தபோதும் கிருஷ்ணகுமார் களச் செய்தி சேகரிப்பில் தயக்கமின்றிச் செயற்பட்டிருந்தார்.

வானொலியில் ஒலிபரப்பாகிய ஊர்சுற்றும் ஒலிவாங்கி நிகழ்ச்சிக்காக ஏராளமான நேர்காணல்களை பதிவு செய்திருந்தார்.

போருக்குப் பின்னரும்  தினக்குரல், வலம்புரி, தமிழ்மிரர் உட்பட்ட ஊடகங்களுக்கான செய்தியாளராகவும் பணியாற்றியிருந்தார்.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார் என்றும் அவருடைய இறுதிச் சடங்கு அக்கராயனில் உள்ள அவருடைய இல்லத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...