Home தென்னிலங்கைச் செய்திகள் வடக்கு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் – அரசாங்கம்!
தென்னிலங்கைச் செய்திகள்

வடக்கு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் – அரசாங்கம்!

Share
Share

“வடக்கு தமிழ் மக்கள் நீதியை எதிர்பார்க்கின்றனர். அதன் அடிப்படையிலேயே தேசிய மக்கள் சக்திக்கு அவர்கள் ஆணை வழங்கினர். அந்த மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும்.” இவ்வாறு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது எழுப்பப்பட்ட கேள்வி யொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்குரிய முயற்சிகள் தொடரும். இந்த விடயத்தில் கடந்தகால அரசுகளை விட எமக்கே கூடுதல் பொறுப்பு உள்ளது. கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் கூட வடக்குக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை உள்ளிட்ட விடயங்களுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். எமது பிரச்சினையை அரசு உணர்ந்துள்ளது, எனவே, நீதியை வழங்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டால்தான் பிரச்சினைகள் முழுமையாகத் தீரும். அதற்குரிய நடவடிக்கையையே நாம் முன்னெடுத்து வருகின்றோம்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...