Home தாயகச் செய்திகள் வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

Share
Share

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க போராட்டத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (13) ஈடுபட்டனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பணியாற்றுகின்ற யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளி மாவட்ட சேவை காலத்தை நிறைவு செய்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், சரியான பொறிமுறையின் கீழ் இதுவரை இடமாற்றம் வழங்கப்படவில்லை என தெரிவித்து இந்த போராட்டத்தை மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரை மூவர் அடங்கிய குழுவினர் சந்தித்து தமது பிரச்சனைகளை தெரியப்படுத்தினர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ். மாவட்ட செயலரை சந்தித்து கலந்துரையாடியதோடு மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...