Home தென்னிலங்கைச் செய்திகள் ரணில் தலைமையில் எதிர்கட்சிகளின் பிரமுகர்கள் சந்திப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ரணில் தலைமையில் எதிர்கட்சிகளின் பிரமுகர்கள் சந்திப்பு!

Share
Share

முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை நேற்று (10) நடைபெற்றது.

கொழும்பு ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் பொதுஜன ஐக்கிய முன்னணித் தலைவர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சஞ்ஜீவ எதிரிமான்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் தற்போதைய அரசாங்கத்துக்கு ஒரு வருடம் நிறைவடைவதையொட்டி, அரசாங்கத்துக்கு எதிராக நடத்தப்படவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த மாதம் அரசாங்கத்துக்கு எதிராக நடத்தப்படவுள்ள எதிர்ப்புப் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்தல் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...