Home தாயகச் செய்திகள் யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு – இராணுவத்தின் சிவில் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் படுகாயம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு – இராணுவத்தின் சிவில் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் படுகாயம்!

Share
Share

யாழ்ப்பணம், குரும்சிட்டி – தெல்லிப்பழை வைத்தியசாலை வீதியில் இன்று வியாழக்கிழமை காலை வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழு ஒன்று குடும்பஸ்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தின் சிவில் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய நபரே வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

மேற்படி குடும்பஸ்தர் படுகாயங்களுடன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...