Home தென்னிலங்கைச் செய்திகள் மின்சார திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் சான்றுப்படுத்தினார்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மின்சார திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் சான்றுப்படுத்தினார்!

Share
Share

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தில் தனது கையொப்பத்தையிட்டு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன திங்கட்கிழமை (18) சான்றுரைப்படுத்தினார்.

கடந்த 06ஆம் திகதி இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு அமைய இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமாக அமுலுக்கு வருகின்றது.

இதன் ஊடாக, தேசிய மின்சார மதியுரைப் பேரவைக்குப் பதிலாக மின்வலு மீதான தேசியக் கொள்கையின் பாகமொன்றாக தேசிய மின்சாரக் கொள்கையைத் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளுக்கு இடமளிக்கின்றது.

மேலும், தொடர்ச்சியான விநியோகம், வினைத்திறனான மற்றும் செலவுச் சிக்கனமான மின்சார விநியோகம், பச்சைவீட்டு வாயுவின் வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை ஊக்குவித்தல் போன்றவற்றை நோக்காகக் கொண்டு “மொத்தவிற்பனை மின்சாரச் சந்தை” என்பது “தேசிய மின்சாரச் சந்தை” என்று மாற்றப்படுகின்றது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...