Home தாயகச் செய்திகள் மின்சாரம் தாக்கி மட்டக்களப்பில் ஒருவர் மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மின்சாரம் தாக்கி மட்டக்களப்பில் ஒருவர் மரணம்!

Share
Share

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம் இலக்க கிராமத்தில் நேற்று (18) மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் துறைநீலாவணை கிராமத்தினை சேர்ந்த 41 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

35ஆம் இலக்க கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டிலிருந்து அயல் வீட்டுக்கு மின்சார இணைப்பு வழங்க முற்பட்டபோது மின்சாரம் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மின்சாரம் தாக்கிய நபரை உறவினர்களின் உதவியுடன் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வேளையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெல்லாவெளி பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...