Home தென்னிலங்கைச் செய்திகள் மகிந்தவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்கவேண்டும் – பொன்சேகா கருத்து!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மகிந்தவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்கவேண்டும் – பொன்சேகா கருத்து!

Share
Share

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

2010இல் ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட கடுமையான ஊழல் மற்றும் அரசியல் முறைகேடுகளையும் வன்மையாக கண்டித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்-

மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய இலங்கைத தலைவர்களுக்கும் தேசிய வளர்ச்சிக்கான தெளிவான தொலைநோக்கு பார்வை இல்லை.

சர்வதேச தலைவர்களை ஒப்பிடுகையில், அவர்கள் ஊழலுக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள்.

2010 ஆம் ஆண்டு ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் சீனாவுக்கு அரசு மேற்கொண்ட பயணத்தின்போது, 65 பேர் சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் அதிகாரபூர்வமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும், ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகளை நாம் மன்னிக்கவில்லை. அதிகாரிகளை பொறுப்புக்கூற வைப்பதில் தற்போதைய அரசின் செயல்பாட்டை
ஆதரிக்கிறேன்.

ரணில் விக்கிரமசிங்க செய்தது சரி என்று நான் கூறவில்லை. அவரது தலைவிதியைப் பார்ப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார்.

ஆனால் இந்த விஷயத்தில், இந்த அரசாங்கம் அமைத்த முன்னுதாரணத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். அந்த முன்னுதாரணத்தின் அடிப்படையில், ராஜபக்ஷ போன்ற ஒருவருக்கு சுமார் 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும்-என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...