Home தென்னிலங்கைச் செய்திகள் போதைப் பொருட்களுடன் ஒரே நாளில் 788 பேர் கைது!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

போதைப் பொருட்களுடன் ஒரே நாளில் 788 பேர் கைது!

Share
Share

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசிய திட்டத்தின் கீழ் நேற்று
முன்தினம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 788 பேர் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 16 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 805 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 7 பேர் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பிவைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப் பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, 252 கிராம் ஹெரோயின், 347 கிராம் ஐஸ், 582 கிலோகிராம் 751 கிராம் கஞ்சா, 50 கஞ்சா செடிகள், 140கிராம் குஷ் ரக போதைப்பொருள், 25 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 1,701 போதை மாத்திரைகள், 134 கிராம் 600 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 3 கிலோகிராம் 288 கிராம் மாவா போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...