Home தாயகச் செய்திகள் போக்குவரத்து தொடர்பில் நல்லூர் பிரதேச சபை விடுத்துள்ள அறிவிப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

போக்குவரத்து தொடர்பில் நல்லூர் பிரதேச சபை விடுத்துள்ள அறிவிப்பு!

Share
Share

யாழ். புதிய செம்மணி வீதிச் சந்தியில் இருந்து கொக்குவில் சந்தி வரையான ஆடியபாதம் வீதியூடாக டிப்பர் வாகனங்கள் காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை பயணிப்பதற்கு முற்றாகத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

அத்துடன் ஏனைய பாரவூர்திகள் காலை 7 மணி தொடக்கம் 9 மணி வரை மற்றும் நண்பகல் 12 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரை அந்த வீதியூடாகப் பயணிப்பதற்குத் தடை விதித்து பொதுப்போக்குவரத்தை இலகுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்பள்ளி சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், உத்தியோகத்தர்கள் பணிக்குச் செல்லும் நேரங்கள் மற்றும் அண்மையில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பொதுப்போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்குடன் இந்த விடயங்கள் குறித்து நல்லூர் பிரதேச சபையால் தீர்மானிக்கப்பட்டு, இந்தப்  போக்குவரத்துத் தடை நடைமுறைக்கு வந்துள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் பலகைகள் வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, வாகன சாரதிகள் இந்த விதிமுறைகளைப் பின்பற்றுமாறு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் அறிவுறுத்தியுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...