Home தாயகச் செய்திகள் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்! யாழில் இளைஞர் காயம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்! யாழில் இளைஞர் காயம்!

Share
Share

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் மீது தாம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் அவர் கட்டளையை மீறிச் சென்றதாலேயே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் இளைஞர் காயமடைந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தென்மராட்சி, கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழப்பட்ட மணலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் இடைமறித்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, பொலிஸாரின் கட்டளையை மீறி உழவு இயந்திரம் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பொலிஸார் உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த சாரதி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாலாவி தெற்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த 20 வயதான மாணிக்கவாசகர் மதுசன் எனும் இளைஞனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...