Home தாயகச் செய்திகள் ஆஸி. முதலீட்டாளரிடமிருந்து நிதி மோசடி! மன்னாரில் இருவர் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஆஸி. முதலீட்டாளரிடமிருந்து நிதி மோசடி! மன்னாரில் இருவர் கைது!

Share
Share

அவுஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரின் நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில், மன்னாரில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, சந்தேகநபர்களை, மன்னார் நீதிமன்றில் பிரசன்னப்படுத்திய போது, அவர்களை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

குறித்த இருவரும் 180 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட முதலீட்டாளரால், மன்னார், நானாட்டான், புதுக்குடியிருப்பு மற்றும் ஓமந்தை ஆகிய பகுதிகளில், பல வணிகங்களை ஆரம்பிப்பதற்காக, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவருக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியே மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், இந்த சம்பவத்தின் முக்கியசந்தேகநபர் ஒருவரும் அவரது மனைவியும் தற்போது தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...